2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ரபேல் நடால், மரியா சரப்போவா ஆகியோர் வெற்றி

A.P.Mathan   / 2014 மே 12 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் மாஸ்டேர்ஸ் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால், மரியா சரப்போவா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பானிய வீரர் ரபேல் நடால், ஜப்பானிய நாட்டு வீரர் கெய் நிஷிகோரியுடன் மோதினார். முதல் சுற்றில் நடால் தோல்வியடைந்த போதும் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார். மூன்றாவது சுற்றில் முன்னிலையில் இருந்தபோது கெய் நிஷிகோரி உபாதையடைந்து தொடர்ந்து விளையாட முடியாது என அறிவித்தார். இதனையடுத்து ரபேல் நடால் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. ரபேல் நடால் 2 இற்கு 6, 6 இற்கு 4, 3 இற்கு 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ரபேல் நடால் நான்காவது  தடவையாக இந்த தொடரில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்சிய வீராங்கனை மரியா சரப்போவா, ரொமேனியா வீராங்கனை சிமோனா ஹலெப் உடன் மோதி முதல் சுற்றில் தோல்வியடைந்தாலும் அடுத்த இரண்டு சுற்றுகளிலும் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கினார். 1 இற்கு 6, 6 இற்கு 2, 6 இற்கு 3 என்ற செட் கணக்கில் மரியா சரப்போவா வெற்றி பெற்றார். 2011ஆம் ஆண்டு பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருது மரியா சரப்போவா விளையாடிய 50 போட்டிகளில் 47 இல் வெற்றி பெற்றார்பெற்றுள்ளார். தோல்வியடைந்த 3 போட்டிகளும், கடந்த வருட மாட்ரிட் மாஸ்டேர்ஸ் சம்பியன் செரீனா வில்லியம்சிடம் என்பது குறிப்பிடத்தக்கது. உபாதை காரணமாக இந்த தொடரில் இருந்து செரீனா வில்லியம்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை விலகிக் கொண்டார். மரியா ஷரப்போவா இந்த வெற்றியுடன் 32 சம்பியன் பட்டங்களை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X