2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் ஐவருக்கு அபராதம்

A.P.Mathan   / 2014 மே 17 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் ஐவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சி போட்டி ஒன்றில் விளையாடிமைக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்க கிரிக்கெட் சம்மேளனத்தின் அங்கிகாரம் இல்லாத ஒரு கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அனுமதியின்றி குறித்த ஐந்த வீரர்களும் பங்கு பற்றியுள்ளனர். பவாட் அலாம், அப்துல் ரஸாக், நஸீர் ஜெம்ஷெட், வஹாப் ரியாஸ், சஸாய்ப் ஹசன் ஆகிய ஐந்து வீரர்களுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆயுட்கால தடை விதிகப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் தனேஷ் கனேரியாவுடன் இணைந்து விளையாடியுள்ளனர். இதற்கு சர்வதேசக் கிரிக்கெட் சபை தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது. ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்து இருந்தது. அதன் படி சட்டவிரோத கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய குற்றத்திற்காக தலா ஐந்து லட்சம் ரூபா ஒவ்வொரு வீரருக்கும் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது. 
 
இதேவேளை அமெரிக்க கிரிக்கெட் சம்மேளனம் தனது நாட்டு வீரர்களுக்கும் சட்ட விரோத போட்டிகள் சில அமெரிக்காவில் நடைபெறுவதாகவும் அவற்றில் பங்கு பற்ற வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது. கிரிக்கெட் சபைகளின் அங்கிகாரம் இல்லாமல் நடைபெறும் போட்டிகள் சட்டவிரோத போட்டிகள் எனவே கருத்திற் கொள்ளப்படும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X