2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி பெங்களுரூ சின்னசுவாமி மைதானத்தில்

A.P.Mathan   / 2014 மே 18 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி மாற்றம் செய்யப்பட்டபடி பெங்களுரூ சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் விதிமுறைகளின் படி கடந்த வருடத்தில் சம்பியன் ஆகிய அணியின் மைதனத்தில் இறுதிப் போட்டி நடைபெறவேண்டும். அதன்படி மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற வேண்டும். இருப்பினும் பல காரணங்களை காட்டி ஐ.பி.எல் இறுதிப் போட்டி மும்பையில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்படுவதாக ஐ.பி.எல் முகாமைத்துவம் அறிவித்தது. அதற்கு தங்கள் அதிருப்தியை கடிதம் மூலம்  வெளியிட்ட மும்பை கிரிக்கெட் சம்மேளனம் காரணத்தையும் கோரி இருந்தது. அதற்கு பதிலளித்த ஐ.பி.எல் தலைவர் ரஞ்சித் பிஸ்வால் 15 நிபந்தனைகளை மும்பை கிரிக்கெட் சம்மேளனத்திற்கு அனுப்பி அதற்க்கு உடன்பட்டால் மும்பையில் போட்டிகளை நடத்த முடியும் என கூறியிருந்தார். அதற்கு மும்பை கிரிக்கெட் சம்மேளனம் சம்மதம் தெரிவித்தது. இருப்பினும் ஐ.பி.எல் நிர்வாக சபைக் கூட்டத்தில் மைதானத்தை மாற்றுவதில்லை எனவும் பெங்களுரூ சின்னசுவாமி மைதனத்தில் இறுதிப் போட்டியை நடத்துவது எனவும் முடிவு எடுக்கபட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவானது மும்பை கிரிக்கெட் சம்மேளனத்திற்கும், மும்பை ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளதாக மும்பை கிரிக்கெட் சம்மேளன செயலாளர் நிதின் தலால், இன்னமும் இந்த முடிவு தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X