2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

உலகக் கிண்ணத்தில் இன்று களமிறங்கும் நாடுகள்

Menaka Mookandi   / 2014 ஜூன் 13 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது நாளான இன்று, மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் போட்டி இலங்கை நேரபப்டி இரவு 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. குழு A அணிகளான மெக்சிகோ, கமரூன் அணிகளுக்கிடையில் இந்த முதலாவது போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தமக்குள் ஒரு தடவை விளையாடியுள்ளன. அதில் மெக்சிகோ அணி வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது போட்டி நள்ளிரவு 12.30இற்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் மோதிய நடப்பு சம்பியன் ஸ்பெயின், மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் இந்த இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.

குழு B இல் அடங்கியுள்ள இந்த அணிகள் தமக்கிடையில் 10 போட்டிகளில் மோதியுள்ளன. ஸ்பெயின் அணி 5 வெற்றிகளையும், நெதர்லாந்து அணி 4 போட்டிகளையும் வென்றுள்ள அதேவேளை ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

நாளை அதிகாலை 3.30 இற்கு குழு Bஇன் மற்றைய இரண்டு அணிகளான சிலி, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் 4 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 3 போட்டிகளில் சிலி அணி வெற்றி பெற்றுள்ள அதேவேளை ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X