2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

உலகக் கிண்ணம்: மூன்றாமிடப் போட்டி இன்று

A.P.Mathan   / 2014 ஜூலை 12 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் மூனறாமிடத்திற்கான போட்டி இன்று பிரேசில், நெதர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி நள்ளிரவு தாண்டி 1.30 இற்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. 
 
காலிறுதிப் போட்டியில் ஜேர்மனி அணியிடம் 1 இற்கு 7 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து மூன்றாமிட போட்டிக்கு உலகக்கிண்ணத்தை நடாத்தும் பிரேசில் அணி தெரிவாகியது. நெதர்லாந்து அணியானது ஆர்ஜன்டீனா அணியிடம் 2 இற்கு 4 என்ற பனால்டி உதை மூலம் தோல்வியடைந்து மூன்றாமிட போட்டிக்கு தெரிவாகியது. மூன்றாமிடப் போட்டிக்கு நான்காவது தடவையாக பிரேசில் அணி தெரிவாகியுள்ளது. 2 தடவைகள் மூன்றாமிடத்தையும், ஒரு தடவை நான்கமிடத்தையும் பிரேசில் அணி இதுவரை பெற்றுள்ளது. நெதர்லாந்து அணி இரண்டாவது தடவையாக மூன்றாமிடப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. முதற் தடவை 1998 ஆம் ஆண்டு தோல்வியை சந்தித்தது.
 
இரு அணிகளும் இதுவரை 11 போட்டிகளில் மோதியுள்ளன. இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ள அதேவேளை 5 போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .