
பிரேசில் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் பிலிப்பே ஸ்கொலறி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். பிரேசில் கால்பந்தாட்ட சம்மேளனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
உலகக் கிண்ணத்தில் சொந்த நாட்டில் வைத்து நான்காமிடத்தையே பிரேசில் அணியால் கைப்பற்ற முடிந்தது. அரை இறுதிப் போட்டியில் தங்கள் கால்பந்தாட்ட வரலாற்றில் மோசமான தோல்வியை சந்தித்தது பிரேசில். அதற்கு அடுத்த மூன்றாமிடப் போட்டியிலும் இன்னுமொரு மோசமான தோல்வியை பிரேசில் அணி சந்தித்தது.
பிரேசில் கால்பந்தாட்ட சம்மேளன தலைவர ஜோஸ் மரியா மரின் உடன் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 65 வயதான ஸ்கொலறி, 2002ஆம் ஆண்டு முதல் பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளாராக கடமையாற்றியுளார். பிரேசில் அணியின் முன்னேற்றத்திற்கு மாற்றங்கள் தேவை. புதிய பயிற்றுவிப்பாளர் குழு தேவை என்பது அனைவருதும் கருத்தாக உள்ளது. எனவே ஸ்கொலறி மற்றும் அவர்களுது குழுவினரை விடுவிக்கும் அதேவேளை அவர்களின் பணி கடந்த காலத்தில் மிகப்பெரியளவில் இருந்துள்ளது. அதற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என பிரேசில் கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஜோஸ் மரியா மரின் தெரிவித்துள்ளார்.
இந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடருடன் அவரின் ஒப்பந்தம் நிறைவடையும் நிலையில் தனது ராஜினாமாக் கடிதத்தை ஸ்கொலறி கையளித்துள்ளார்.
பயிற்றுவிப்பாளாராக பிரேசில், ஜேர்மனியுடன் அடைந்து 1 இற்கு 7 என்ற மிக மோசமான தோல்வி எப்போதும் தன்னை நினைவு படுத்தும் விதமாக அமையும். ஆனாலும் இந்தப் பதவியை எடுக்கும் போதே இவ்வாறான கடின நிலை ஏற்படும் வாய்ப்புகளை எதிர்பார்த்தே பதவி ஏற்றேன் என பிரேசில் அணிக்கு கடந்த 12 வருடங்களாக பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய லூயிஸ் பிலிப்பே ஸ்கொலறி தெரிவித்துள்ளார்.
அரை இறுதிப் போட்டியில் பிரேசில் அணி தோல்வியடைந்த பின்னர் பதவி விலகல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கான வாய்ப்புக்கள் இல்லை எனவும் தான் பிரேசில் அணியை கடந்த காலங்களில் சிறப்பாக வழி நடத்தியதாகவும் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்ததாகவும் ஸ்கொலறி கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.