2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மெஸ்சிக்கு தொடர் நாயகன் விருது தவறானது: மரடோனா

A.P.Mathan   / 2014 ஜூலை 15 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் சிறந்த வீரருக்கான விருது ஆர்ஜன்டீனா அணித் தலைவருக்கு வழங்கப்பட்டு இருக்கக் கூடாது என ஆர்ஜன்டீனா அணியின் முன்னாள் தலைவர் டியாகோ மரடோனோ தெரிவித்துள்ளார். 
 
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். மெஸ்ஸி தனித்து உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ஆர்ஜன்டீனா அணியை அழைத்து சென்றுள்ளார். அவர் மீதானா விருப்பம் எனக்கு வானளவு உயரத்திற்கு உள்ளது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர் கொலம்பியா அணியின் ஜேம்ஸ் ரொட்ரிகாஸ். அவருக்கே சிறந்த வீரருக்ககான விருது வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என மரடோனோ தெரிவித்துள்ளார். 
 
விளம்பரதாரர்கள் மெஸ்ஸி ஏதாவது ஒன்றை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்பட்டதே இந்த விருது. மெஸ்ஸி உண்மையாக இந்த விருதை வெல்லவில்லை என தெரிவித்த மரடோனோ - ஜேர்மனி வீரர் கோட்ஸே அடித்த கோல் மூலம் கவலையடைந்ததாகவும், உலககிண்ணத்தை ஐகுயைன் தவறவிட்ட இலகுவான கோலை அடித்து இருந்தால் ஆர்ஜன்டீனா அணி நிச்சயம்  நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும். ஜேர்மனி அணி ஆதிக்கம் செலுத்தி இருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X