A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று ஆரம்பித்துள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இலங்கை அணியின் ஆரம்பம் நன்றாக இருந்த போதும் மத்திய தர வரிசை வீரர்கள் சிறப்பாக துடுப்பாட தவறி விட்டனர். நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடி வரும் இலங்கை அணி, முதல் நாள் நிறைவில் 85.1 ஓவர்களில் 08 விக்கெட்கள் இழப்பிற்கு 261 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் உப்புல் தரங்க 92 ஓட்டங்களையும், கௌஷால் சில்வா 41 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் ஜுனைட் கான் 4 விக்கெட்களையும், வஹாப் ரியாஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 79 ஓட்டங்களை உப்புல் தரங்க, கௌஷால் சில்வா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago