2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இலங்கை போட்டிகளில் அஜ்மல் சந்தேகம்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான சைட் அஜ்மல், இலங்கை அணியுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பங்கு பற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனது பந்துவீச்சு பரிசோதனைக்காக இங்கிலாந்து செல்வதன் காரணமாக இந்த தொடரில் அவர் பங்கு பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதற் போட்டியின் போது நடுவர்கள் இவரின் பந்துவீச்சு விதிமுறைகளை மீறி இருப்பதாக முறையீடு செய்தனர். இந்த முறையீடு செய்யப்பட்டு 21 நாட்களுக்குள் உயிரியல் இயந்திர தொழில் நுட்பம் மூலம் தனது பந்துவீச்சு சரியாக இருப்பதாக நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க தவறும் பட்சத்தில் அவர் பந்துவீச தடை   விதிக்கப்படுவார்.
 
சைட் அஜ்மல் 25ஆம் திகதி குறித்த பரிசோதனையை இங்கிலாந்து கார்டிப் பல்கலைக் கழகத்தில் செய்துகொள்ளவுள்ளார். உடனடியாக இந்த சோதனை முடியும் பட்சத்தில் மறுநாளே அவர் இலங்கை திரும்பி அணியுடன் இணையும் வாய்ப்புகள் உள்ளன. இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி 27ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. ஆனாலும் குறித்த சோதனை நடவடிக்கைகளுக்கு மேலதிக நாட்கள் தேவைப்பட்டால் அவர் தொடரில் முழுமையாக பங்குபற்ற முடியாமல் போகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .