2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

சம்பியன் லீக் போட்டிகளில் இருந்து டில்ஷான் விலகினார்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் நடைபெறவுள்ள சம்பியன் லீக் போட்டிகளில் திலகரட்ன டில்ஷான் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட்டின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் இருந்து சம்பியன் லீக் தொடரில் பங்குபற்றும் சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணியில் திலகரட்ன டில்ஷான் இருந்த போதும், குடும்ப தேவைகள் காரணமாக இந்த தொடரில் பங்குபற்றமுடியாமல் இருப்பதாகவும் அதற்க்கான அனுமதியை வழங்குமாறும்  டில்ஷான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருக்கு அனுமதி வழங்கபட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. 
 
நாளைய தினம் சம்பியன் லீக் தொடர் இந்தியாவில் ஆரம்பிக்கவுள்ளது. முதற்ப் போட்டியில்  சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணி, நியூசிலாந்து நொதேர்ன் டிஸ்ட்ரிக்  அணியுடன் மோதவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .