2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

அர்ஜுன் டெண்டுல்காரின் கன்னிச் சதம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 21 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சச்சின் டெண்டுல்காரின் புதல்வர் அர்ஜுன் சச்சின் டெண்டுல்கார், தனது கன்னிச் சதத்தை பன்னிரெண்டாவது வயதில் பெற்றுள்ளார். நேற்று (20) மும்பையில் நடைபெற்ற போட்டி ஒன்றிலேயே அவர் இந்த சதத்தைப் பெற்றுள்ளார். இந்த தகவலை சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். கன்னிச்சத்தத்தை பெற்றது மட்டுமல்லாமல் வேகமாகவும் அடித்துள்ளார் என்பது சிறப்பாக அமைந்த்துள்ளது. 
 
மும்பை 14 வயதுக்குட்பட்ட அணியை தெரிவு செய்வதற்கான போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் கார் ஜிம்கானா அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கார், இந்த சதத்தைப் பெற்றுள்ளார். இந்த சதத்தின் மூலம் அவர் விளையாடிய அணி ஓர் இன்னிங்க்ஸ் மற்றும் 21 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.அர்ஜுன் இந்தப் போட்டியில் 124 ஓட்டங்களை 14 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 42 பந்துகளில் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இடதுகர துடுப்பாட்ட வீரரான அர்ஜுன் கூடுதலான ஓட்டங்களாக 64 ஓட்டங்களையே பெற்று இருந்தார். 12 வயதான அர்ஜுன் 14 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
அர்ஜுன் டெண்டுல்கார் ஒரு சகலதுறை வீரர் ஆவார். இடது கர வேகப்பந்தும் வீசக் கூடிய இவர் கடந்த வருடம் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டார். பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டியில் 22 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளமை குறிப்பிடதக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .