A.P.Mathan / 2014 நவம்பர் 12 , மு.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் வெற்றிக்கான வாய்ப்புகளை பாகிஸ்தான் முழுமையாக பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 262 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் ரொம் லதாம் 103 ஓட்டங்களையும், கூரே அன்டர்சன் 48 ஓட்டங்களையும் பெற்றனர். ரஹாத் அலி 4 விக்கெட்களையும், சுல்பிகார் பாபர் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 304 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தபோதும் நியூசிலாந்தை துடுப்பாட அழைக்காமல் பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்சிற்க்காக துடுப்பாடுகிறது. விக்கெட் இழப்புகள் இன்றி 15 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது. 1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago