2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியா தொடரில் முன்னிலையில்

A.P.Mathan   / 2014 நவம்பர் 19 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று, 2 இற்கு 1 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது. 
 
கன்பெராவில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 329 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆரோன் பிஞ்ச் 109 ஓட்டங்களையும், ஸ்டீபன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 53 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மோர்னி மோர்க்கல் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். 
 
பதிலுக்கு துடுப்பாடிய தென் ஆபிரிக்கா அணி 44.3 ஓவர்களில் 256 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஹாசிம் அம்லா 102 ஓட்டங்களையும், வில்லியர்ஸ் 52 ஓட்டங்களையும், குயின்டன் டி கோக் 47 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க் 4 விக்கெட்களையும், ஜோஸ் ஹஸல்வேர்ட் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ஸ்டீபன் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .