2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஹியூஸின் இறுதிச் சடங்கில் கதறியழுத கிளார்க்

George   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


பந்து தாக்கியதால் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச்சடங்குகள், நியூ சவுத் வேல்ஸ்ஸில் இன்று புதன்கிழமை(03) நடைபெற்றது.  
 
ஹியூஸின் இறுதிக்கிரியைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் கண்ணீர் மல்க நின்ற காட்சிகள் உலகத்தை கலங்க வைத்துவிட்டன.
 
ஹியூஸை வழியனுப்பும் இறுதிக்கிரியைகளில் சுமார் 5,000ற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
 
கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி சிட்னி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியொன்றின்போது, பந்து தாக்கி படுகாயமடைந்த ஹியூஸ் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.
 
பிலிப் ஹியூஸின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க இரங்கள் உரையாற்றும்போது அழுதேவிட்டார்.
 
'தம்பி உனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. உன்னை எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பேன். ஒவ்வொரு நிமிடமும் உனது குரலை கேட்க, முகத்தை ஏதாவது மூலையில் பார்க்க காத்து இருக்கிறேன்.
 
உன் ஆத்மா என்னுடன் இருக்கும். அது என்னைவிட்டு விலகாது என்று நம்புகிறேன்.
 
ஹியூக்ஸ் நீ கடைசியாக விளையாடிய மைதானத்துக்கு சென்றேன். நீ கீழே விழுந்த இடத்தில் இருந்த புற்களை தொட்டேன். அப்போது நீ எனக்குள் இருப்பதை உணர்ந்தேன். எனது கால்கள் மேலே செல்கிறதா என்று பார்த்தேன். ஆனால் நான் சரியாக இருந்தேன். ஹியூக்ஸ் உள் ஆத்மா என்னை ஓட்டங்களை குவிக்க ஊக்குவிக்கும்.
 
உன் ஆத்மா எங்களது ஒவ்வொரு போட்டியிலும்; பங்கேற்கும். நீ என்னிடம் அடிக்கடி சொல்வாய். நாம் தோண்டி எடுத்து விட்டு (ஓட்டங்களை) 'டீ' குடிக்க செல்வோம் என்று. இப்போது சொல்கிறேன். நாம் தோண்டி எடுக்க... இப்படி சொல்லிவிட்டு துயரம் தாங்காமல் கிளார்க் அழுதார்.
 
நாம் கட்டாயம் தோண்டி எடுக்க செல்ல வேண்டும். அதன்பின் 'டீ' குடிக்க செல்ல வேண்டும். ஒன்றாக விளையாட வேண்டும். எனது இளைய சகோதரர், உனது ஆத்மா சாந்தி அடையட்டும். நான் உன்னை தேடி ஒருநாள் நிச்சயம் வருவேன்” என்றார்.






(படங்கள்: ரொய்டர், ஏ.பி.)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .