A.P.Mathan / 2014 டிசெம்பர் 25 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நாளை (26) அதிகாலை ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை நேரப்படி அதிகாலை 3.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் 1982/83 பருவகாலத்தில் முதற் டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் ஆரம்பமானது. இலங்கை அணி 1994/95 பருவகாலத்தில், நியூசிலாந்தில் வைத்து முதற் தொடர் வெற்றியைப் பெற்றது. அது மாத்திரமே நியூசிலாந்தில் பெற்ற ஒரே தொடர் வெற்றி. இரு அணிகளும் இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இவற்றில் 10 போட்டிகளில் நியூசிலாந்து அணியும், 8 போட்டிகளில் இலங்கை அணியும் வென்றுள்ளன. 10 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. நியூசிலாந்தில் நடைபெற்ற 13 போட்டிகளில் 06 போட்டிகளில் நியூசிலாந்து அணியும், 02 போட்டிகளில் இலங்கை அணியும் வென்றுள்ளன. 05 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. 1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago