2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பிரக்ஜன் ஓயாவுக்கு பந்துவீசத் தடை

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 27 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பிரக்ஜன் ஓஜாவுக்கு அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பந்துவீசுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தடை விதித்திருக்கிறது.

ஹைதராபாத் கிரிக்கெட் சபையின் வேண்டுகோளுக்கிணங்க, சர்வதேச கிரிக்கெட் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட குழுவொன்று சென்னையில் பரிசோதனை மேற்கொண்டது. இந்தப் பரிசோதனையில் அங்கிகரிக்கப்பட்ட 15 பாகைக்கும் அதிகமாக ஓஜா பந்து வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஓஜா பந்து வீச முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .