A.P.Mathan / 2015 மார்ச் 07 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற 'பி' பிரிவு லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணி, அதிர்ச்சித் தோல்வியடைந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. பாகிஸ்தான் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஹரிஸ் சொகைலுக்குப் பதிலாக யூனுஸ் கானும், காயமடைந்த நஸிர் ஜம்ஷெட்டுக்குப் பதிலாக சஃப்ராஸ் அஹமட்டும் இணைக்கப்பட்டிருந்தனர். தென்னாபிரிக்க அணியில் பெஹார்டியனுக்குப் பதிலாக ஜே.பி.டுமினி உள்வாங்கப்பட்டிருந்தார்.
பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே சற்று நிதானமான ஆட்டத்தையே கைக்கொண்டது. மாற்று வீரராக இணைக்கப்பட்ட சஃப்ராஸ் அஹமட் 49 ஓட்டங்களைப் பெற்று ரண் அவுட்டில் ஆட்டமிழந்தார். யூனுஸ் கான் 37 ஓட்டங்களைப் பெற்றார். ஒரு புறம் விக்கெட்டுக்கள் சரிந்தாலும் மறுபுறம் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடி 56 ஓட்டங்களைச் சேர்த்தார். 46.4 ஓவர்களில் 222 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது பாகிஸ்தான் அணி.
சீரற்ற கால நிலையால் போட்டி 47 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு, 232 ஓட்டங்கள் என்ற இலக்கு தென்னாபிரிக்க அணிக்கு நிர்ணயிப்பட்டது.
ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார்கள். ஆடுகளத்தின் தன்மையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அதே வேளை, அதிவேகமாகவும் அவர்கள் பந்துகளை வீசி தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்களைத் திணறடித்தனர்.
ஒரு புறத்தில் அணித்தலைவர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் அதிரடியாக துடுப்பெடுத்தாடினாலும் மறுபுறம் வேகமாக விக்கெட்டுக்கள் சரிந்தவண்ணமிருந்தன. இறுதியில் 33.3 ஓவர்களில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 29 ஓட்டங்களால் தோல்வியடைந்தது தென்னாபிரிக்க அணி. ஏ.பி.டி.வில்லியர்ஸ் 58 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்து வீச்சில் பாகிஸ்தானின் மொஹமட் இர்பான், ரஹத் அலி, வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 49 ஓட்டங்களை எடுத்ததோடு 6 பிடியெடுப்புக்களையும் செய்த பாகிஸ்தானின் விக்கெட் காப்பாளர் சஃப்ராஸ் அஹமட் போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.
9 minute ago
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
2 hours ago