A.P.Mathan / 2015 மார்ச் 08 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார, தான் இந்த வருடம் ஓகஸ்ட் மாத இறுதிப்பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றிற்கு இந்த தகவலை அவர் கூறியுள்ளார். நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள குமார் சங்ககார - ஜூலை, ஓகஸ்ட் காலப்பகுதியில் நடைபெறவுள்ள இரண்டு அல்லது ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடிய பின்னர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரே குமார் சங்ககாரவின் இறுதி டெஸ்ட் தொடராக அமையவுள்ளது.
உலகக் கிண்ண தொடரில் இன்று அடித்த சத்தத்துடன் மூன்று சதங்களை தொடர்ந்து அடித்தவர் என்ற புதிய சாதனை, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மூன்று சதங்களை தொடர்ந்து அடித்தவர் என்ற சாதனையில் ஏழாவது வீரராக இணைந்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கூடுதலான சதங்களை அடித்தவர்களில் 5 சதங்களுடன் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார். அத்துடன் இன்றைய தினத்தில் உலகக் கிண்ண தொடரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர் என்ற முக்கிய மைல் கல்களைப் பெற்றுள்ளார்.
குமார் சங்ககார தனது கிரிக்கெட்டின் வாழ்நாளில் உயரிய நிலையில் தற்போதே இருப்பதாக வர்ணிக்கப்படுகின்றது. "தான் அந்த நிலையில் இருக்கின்றேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அணிக்கு எது தேவையோ அதை நான் செய்து வருகின்றேன்" என குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.
9 minute ago
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
2 hours ago