A.P.Mathan / 2015 மார்ச் 16 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் வீரர்களுக்கு வாழ்வா சாவா போட்டிகளில் அழுத்தங்களை சந்திப்பது எவ்வாறு என நன்றாக தெரியும் என இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் மார்வன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண குழுவில் உள்ள வீர்கள் மற்றைய அணியில் உள்ள வீரர்கள் விளையாடிய போட்டிகளிலும் பார்க்க கூடுதலான போட்டிகளில் விளையாடியவர்கள்.
குறிப்பாக 2007ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் அடங்கலாக அதிகமான அவ்வாறன போட்டிகளில் விளையாடியுள்ளனர். வேறு எந்த அணியும் விளையாடாதளவு கடந்த 7 வருடங்களில் இலங்கை வீரர்கள் வாழ்வா சாவா போட்டிகளில் விளையாடியுள்ளனர். உலகக் கிண்ண தொடரில் 5 போட்டிகளில் கடந்த இரண்டு உலகக் கிண்ணங்களிலும் விளையாடியுள்ளனர். இரண்டு இறுதிப் போட்டிகளிலும் மாத்திரமே அவர்கள் தோல்விகளை சந்தித்தனர். அதேவேளை கடந்த உலக 20-20 தொடரில் வெற்றி பெற்றுள்ளனர். அதற்க்கு முதல் நடைபெற்ற உலக 20-20 தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தனர்.
லசித் மாலிங்கவே இவ்வாறான முக்கிய போட்டிகளை வெற்றி பெற்று தருபவர் என மார்வன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார். முதற்ப் போட்டியில் மோசமான பந்துவீச்சை காட்டி இருந்தாலும் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுள்ளார். சிறந்த வீரர்கள் இவ்வாறே செயற்படுவார்கள். இனி வரும் போட்டிகளிலும் இவ்வாறு சிறப்பாக பந்துவீசி இலங்கை அணிக்கு வெற்றிகளை பெற்று தருவார் என மார்வன் அத்தப்பத்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களே கூடுதலான ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் இருக்கின்றனர். எனவே, துடுப்பாட்டமும் நல்ல முறையில் உள்ளது. எனவே, முக்கிய போட்டிகளில் சரியாக விளையாடி அந்த நேரத்தில் ஓட்டங்களை பெற்று வெற்றியைப் பெறுவதே மிச்சம் உள்ளது. எங்களால் அழுத்தங்களை சரியாக சமாளித்து வெற்றிகளைப் பெற முடியும் என மார்வன் அத்தப்பத்து மேலும் தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago