A.P.Mathan / 2015 மார்ச் 16 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பணிப்பாளர் போல் டோவ்ன்டனின் பதவி கேள்விக்குறியான நிலையில் உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் சுற்றுடன் உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறியமைக்கு முழுமையான பொறுப்பை இவர் கூற வேண்டும். இந்த நிலையில் இவர் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் ஹரிசனை நாளை (17) போல் டோவ்ன்டன், லோர்ட்சில் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில் இவரின் எதிர்காலம் பற்றிய முடிவு தெரிய வரும் என நம்பப்படுகின்றது. இந்த சந்திப்பின் போது எதிர்கால திட்டங்கள் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்பனவற்றை அவர் சமர்பிக்க வேண்டும். அதில் திருப்தி இல்லை என்றால் உடனடியாக பதவி நீக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இவரின் செயற்பாடுகள் தொடர்பில் தலைவராக பதவியேற்கவிருக்கும் கொலின் கிரேவ்ஸ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் திருப்தி இல்லாமல் இருப்பதாகவும் உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை தலைமை தெரிவாளர் ஜேம்ஸ் விடேகர், பயிற்றுவிப்பாளர் பீற்றர் மூர்ஸ் ஆகியோரின் பதவிகளும் ஆபத்தான நிலையிலேயே உள்ளன.
போல் டோவ்ன்டனின் தலையீட்டின் காரணமாகவே கெவின் பீற்றர்சன் அணியை விட்டு வெளியேற்றப்பட்டார் என நம்பப்படுகின்றது. உலகக்கிண்ண தொடரின் போது கெவின் பீற்றர்சன் மீண்டும் அணிக்குள் வர முடியாது. இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் முடிவில் மாற்றங்கள் இல்லை என்ற கருத்துக்களை இவர் தெரிவித்த அதேவேளை பீற்றர்சன் தொடர்பான எதிர்க்கருத்துகளை போல் டோவ்ன்டன் தொடர்ச்சியாக கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு முதல் பணிப்பாளராக இருந்த அன்டி பிளவர், ஆசஸ் தோல்விகளை தொடந்து அந்த பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னரே போல் டோவ்ன்டன் குறித்த பதவியை எடுத்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago