A.P.Mathan / 2015 மார்ச் 16 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண தொடரில் பங்குபற்றும் அணிகள் 10 ஆக குறைக்கப்பட்டால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் அர்த்தமில்லை என அயர்லாந்து அணித் தலைவர் வில்லியம் போர்ட்ஸ்பீல்ட் தெரிவித்துள்ளார்.
இந்த உலகக்கிண்ண தொடரில் அவர்கள் சிறப்பாக விளையாடி வெளியேறினர். பலமான அணிகளுக்கு சவாலாக விளங்கினர். பாகிஸ்தான் அணியுடன் தோல்வியடைந்து வெளியேறியது கவலை என்றாலும் திறமையான அணி உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேற்றப்படுகின்றது என்பது கவலையே. துணை அங்கத்துவ நாடுகள் உலகக்கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்புகளை தொடர்ந்து இழக்கவிருக்கின்றன. பலமான அணியாக அயர்லாந்து வழர்ந்து வருகின்ற போதும் இங்கிலாந்து பிராந்திய அணிகளின் ஆதிக்கம் பல வீரர்களை இங்கிலாந்து அணி நோக்கியும், இங்கிலாந்தின் பிராந்திய அணிகள் நோக்கியும் நகர்த்தியுள்ளன. இங்கிலாந்து அணியின் தற்போதைய தலைவர் ஒய்ன் மோர்கன் அயர்லாந்து அணி வீரர் என்பது குறிபிடத்தக்கது.
எங்கள் கருத்துகள் கோரிக்கைகள் எல்லாவற்றையும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவை இன்னும் இரு வாரங்களில் மறந்துவிடும். இந்த பேச்சு இல்லாமல் போய்விடும். கிரிக்கெட்டை வளர்க்க விரும்பினால் அதிக அணிகளுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும். போட்டிகள் அதிக நாட்கள் எடுக்கின்றன என்ற காரணம் இருந்தாலும் அடுத்த உலகக் கிண்ண தொடர் இந்த தொடரை விட இரண்டு மூன்று நாட்கள் அதிகமாக நடைபெறவுள்ளன. அப்படியானால் ஏன் 10 அணிகள் விளையாடவேண்டும்? அதேவேளை 10 அணிகள் மாத்திரம் என்றால் மற்றைய அணிகள் நாடுகள் கணெக்கெடுக்கப்பட கூடாதா? என்ற கேள்விகளை வில்லியம் போர்ட்ஸ்பீல்ட் எழுப்பியுள்ளார். விளையாட்டை வளர்க்க வேண்டும் என்றால் ஏதாவது இருக்க வேண்டும். நோக்கம், திட்டம் என்பன சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
10 அணிகளுக்கு மட்டும் தான் கிரிக்கெட் என்றால் விளையாடும் மற்ற மற்றைய அணிகள் என்ன செய்வது என்ற கேள்விகளை எழுப்பி தன மன ஆதங்கத்தை பாகிஸ்தான் அணியுடனான தோல்விக்கு பின்னர் வெளியிட்டார். பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இவர் சதம் அடித்தமை குறிப்பிடத்தக்கது.
51 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
3 hours ago