George / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிவேக ஹெட்ரிக் சாதனையால் கிரனேடா அணியை வீழ்த்தி ரியல் மெட்ரிட் அணி வெற்றிப்பெற்றுள்ளது.
ஆட்டத்தின் முதல்பாதியில், 8 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தினார்.
அதிவேக ஹொட்ரிக் கோல் சாதனையுடன் மேலும் 2 கோல்களை தலையால் முட்டி முதன் முறையாக 5 கோல்களை பெற்றார்.
இதனையடுத்து, லா லிகா பட்டியலில் இறுதியில் உள்ள அணியான கிரனேடாவை 9:1 என்ற கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில், பார்சிலோனா அணி, மத்தியுவின் ஒரே ஒரு கோலுடன் போராடி செல்டோவிகோ அணியை, 1:0 என்ற கணக்கில் வென்று லா லிகா தரவரிசைப்பட்டியலில் 71 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடரில், அவ்வணிக்கு இன்னும் இன்னும் 9 போட்டிகள் மீதமிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ரியல் மெட்ரிட் அணி, 67 புள்ளிகளுடன் இராண்டாவது இடத்திலும் நடப்பு சம்பியனான அட்லெட்டிகோ மெட்ரிட் 62 புள்ளிகளுடன் மூன்றாமிடம் வகிக்கிறது.
அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 36 கோல்களுடன் முதலிடத்திலும் லயனல் மெஸ்ஸி 32 கோல்களுடன் இராண்டாமிடத்திலும் உள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago