Kogilavani / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
பிலிப்பைன்சில் இடம்பெறவுள்ள ஆசிய பிராந்திய றகர் போட்டித் தொடருக்கு இலங்கை அணியின் தலைவராக கண்டி அணியின் பிரபல வீரர் பாசில் மரீஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி பிலிப்பைனில் இப்போட்டிகள் இடம்பெற உள்ளன. சுமார் 25,000 பார்வையாளர்களை உள்ளடக்கக் கூடிய புலகான் விளையாட்டரங்கில் இப்போட்டிகள் இடம்பெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பான், ஹாங்கொங், கொரியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட ஆசியாவின் முதல் ஐந்து முன்னணி நாடுகள் இப்போட்டியில் பங்குபற்றவுள்ளன. முதலாம் பிரிவு போட்டிகளில் கஸகஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன.
மேற்படி அணிக்கு தலைமை தாங்கும் பாஜில் மரீஜா கண்டி, கட்டுகாஸ்தோட்டையைச் சேர்ந்தவர். இவர் கண்டி அணி உட்பட அணிக்கு ஏழு பேர் கொண்ட இலங்கை தேசிய அணிக்கு தலைமைதாங்கிய அனுபவம் கொண்ட ஒரு தலைசிறந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago