2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பஞ்சாப்பை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி

George   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓட்டங்களினால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விரேந்தர் ஷெவாக், கரன்வீர்சிங்க்கு பதிலாக மனன் வொஹ்ரா, ரிஷி தவான் இடம்பெற்றனர். 

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் டேல் ஸ்டெய்ன், லோகேஷ் ராகுலுக்கு பதில் மொய்ஸஸ் ஹென்றிகூஸ், ஆஷிஷ் ரெட்டி இடம்பெற்றனர்.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டேவிட் வோனர் மட்டுமே வேகமாக ஓட்டங்களை பெற்றார்.

20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக டேவிட் வோனர் 41 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சர் உள்ளடங்கலாக  58 ஓட்டங்களை பெற்றார். மொய்ஸஸ் ஹென்றிகூஸ், நமன் ஒஜா முறையே 30, 28 ஓட்டங்களை பெற்றனர். 

ஆஷிஷ் ரெட்டி 8 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பாக அக்ஷார் பட்டேல் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

151 ஓட்டங்களை இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஆரம்பத்தில் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்தபோதும் பின்னர் வந்த ஜோர்ஜ் பெய்லி ஆட்டத்தால் சற்று நிலைகொண்டது.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .