2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இலங்கையில் 170 பேர் விதிமுறைகளை தாண்டி பந்து வீசுகின்றனர்

A.P.Mathan   / 2015 ஜூன் 02 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தொழில்சார் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசி வரும் பந்துவீச்சாளர்களில் 170 பேர் 2014 -15 கிரிக்கெட் பருவகாலத்தில் விதிமுறைகளை தாண்டி பந்துவீசுவதாக நடுவர்களினால் முறையீடு செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து அவர்கள் தடைசெய்யப்பட்டனர். இவர்களில் 90 சதவீதமானவர்கள் பந்தை வீசி எறிவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர்களில் 42 பேர் பந்துவீச்சை மாற்றி அமைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு பந்து வீசுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் பந்துவீச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை மட்டத்திலும், முதற் தர போட்டிகளிலுமே இவர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். மிகுதி 128 பந்துவீச்சாளர்களினது பந்துவீச்சு போதியளவு மாற்றங்களை தரவில்லை. எனவே அவர்கள் தொடர்ந்தும் பந்துவீசுவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .