2026 பெப்ரவரி 08, ஞாயிற்றுக்கிழமை

T20 WC 2026: நியூஸி. - ஆப்கன் போட்டி ஆரம்பமானது

Editorial   / 2026 பெப்ரவரி 08 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் லீக் ஆட்​டத்​தில் ‘டி’ பிரி​வில் உள்ள நியூஸிலாந்து - ஆப்​கானிஸ்​தான் அணி​கள் இன்று (08) மோதுகின்​றன. இந்த ஆட்​டம் காலை 11 மணிக்கு சென்னைசேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் ஆரம்பமானது.

மிட்​செல் சாண்ட்​னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி சமீபத்​தில் இந்​தி​யா​வுக்கு எதி​ரான டி 20 தொடரை 1-4 என இழந்த நிலை​யில் டி 20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்​கு​கிறது. டாப் ஆர்​டரில் டிம் ஷெய்​பர்ட், ஃபின் ஆலன் பலம் சேர்க்​கக்​கூடும். ரச்​சின் ரவீந்​தி​ரா, மார்க்சாப்​மேன், டேவன் கான்வே ஆகியோர் நிலை​யான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தி​னால் நடு​வரிசை​யின் பலம் அதி​கரிக்​கும்.

பந்​து​வீச்​சிலும் அந்த அணி உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்த வேண்​டியது அவசி​யம். ஏனெனில் இந்​தி​யா​வுக்கு எதி​ரான தொடரில் நியூஸிலாந்து அணி​யின் பந்​து​வீச்​சாளர்​கள் ரன்​களை வாரி வழங்​கி​யிருந்​தனர். எனினும் ஒரு போட்​டி​யில் விளை​யாடிய லாக்கி பெர்​குசன் கவனம் ஈர்த்​திருந்​தார். இதனால் அவர், ஆப்​கானிஸ்​தான் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். சுழலில் மிட்​செல் சாண்ட்​னர், இஷ் சோதி பலம் சேர்க்​கக்​கூடும். ரஷித் கான் தலை​மையி​லான ஆப்​கானிஸ்​தான் அணி கடந்த வாரம் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான டி20 தொடரை வென்​றிருந்​தது. அணி​யில் உள்ள 11 வீரர்​களும் எந்த தருணத்​தி​லும் சிறப்​பாக செயல்​பட்டு வெற்​றியை தேடிக்​கொடுப்​பவர்​களாக இருப்​பது மிகப்​பெரிய பலமாக பார்க்​கப்​படு​கிறது.

சுழலில் ரஷித் கானுடன் முஜீப் உர் ரஹ்​மான், நூர் அகமது ஆகியோர் பலம் சேர்க்​கக்​கூடும். இரு அணி​களைச் சேர்ந்த சுழற்​பந்து வீச்​சாளர்​களும் சேப்​பாக்​கம் ஆடு​களத்​தில் இருந்து ஓரள​வுக்கு உதவியை எதிர்​பார்க்​கலாம். ஏனெனில் போட்டி காலை 11 மணிக்​குத் தொடங்​கு​வ​தால் பனிப்​பொழிவு இருக்​காது.

ஆப்​கானிஸ்​தான் பேட்​டிங் ரஹ்​மானுல்லா குர்​பாஸ், இப்​ராஹிம் ஷத்ரன், டார்​விஷ் ரசூலி ஆகியோரைச் சுற்​றியே இருக்​கும், மேலும் நிலை​யான செடிகுல்லா அடாலும் கவனிக்​கப்பட வேண்​டிய வீர​ராக இருப்​பார்.

‘சி’ பிரி​வில் மும்பை வான்​கடே மைதானத்​தில்பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் இருசாம்​பிய​னான இங்​கிலாந்து அணி நேபாளத்​துடன் மோதுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X