2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

U 19 உலகக் கிண்ணம்: ஸ்கொட்லாந்தை வென்றது இலங்கை

Editorial   / 2022 ஜனவரி 15 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜார்ஜ்டவுனிலுள்ள எவரெஸ்ட் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட ஐ.சி.சி உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் இலங்கை அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 45.2 ஓவர்களில் 218 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சுகுண நிதர்ஷன லியனகே 85, ரவீன் டி சில்வா 30 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஸ்கொட்லாந்து சார்பில் சீன் பிஸ்ஸர் கெயோக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 48.4 ஓவர்களில் 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் ஜக் ஜார்விஸ் 55 ஓட்டங்களைப் பெற்றதுடன், இலங்கை பந்து வீச்சில் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
 
போட்டியின் சிறப்பாட்டக்காராக துனித் வெல்லலகே தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .