2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 21 பேர் அதிரடியாக கைது

Freelancer   / 2022 மே 19 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா,ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக  படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், மட்டு. புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, இன்று 2 மணியளவில்   விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு கடற்கரையில் சுற்றிவளைத்து சோதனைநடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன் போது இரு படகுகளில் அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு தயாராகிய நிலையில் பெண்கள் உட்பட 21 பேரை கைது செய்ததுடன் இரு படகுகளையு மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு , போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் களுவாஞ்சிக்குடியை சேர்ந்த இதன் பிரதான சூத்திரதாரி தலைமறைவாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .