2021 ஜூன் 16, புதன்கிழமை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டப் பேரணி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 27 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ். பாக்கியநாதன்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்புப் பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு அரசடியிலுள்ள சௌக்கிய பராமரிப்புப்பீட வளாகத்துக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்து காந்தி பூங்காவரை பேரணியாகச் சென்றனர்.

சௌக்கிய பராமரிப்புப் பீடத்துக்கான விரிவுரை மண்டபத்தின் நிர்மாணப்பணி இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை, வைத்தியர்களுக்கான பயிற்சி உபகரணங்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவில்லை, மாணவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

இக்கோரிக்கைகள் தொடர்பில் பல்வேறு தடவைகள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றபோதிலும், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .