2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

'மக்களின் மனங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 29 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதனைவிடவும் மக்களுடைய மனங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை, அவர்களுடைய ஆற்றல்களை வழிப்படுத்த வேண்டிய தேவை, விசேடமாக இளைஞர், யுவதிகள், மாணவர் சமூகத்திலே சிறந்த மாற்றம் ஒன்றைச் முழு மூச்சோடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் தலைமையுரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சாரணர் இயக்கம் என்பது சமூகமயப்படுத்தலிலும் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்திக் கொள்வதிலும்  அனர்த்தம் உட்பட அத்தனை சூழ்நிலைகளிலும் தன்னையும் தன் சார்ந்த சமூகத்தினையும் பாதுகாத்துக் கொள்கின்ற பயிற்சியை போதனைகள் ஊடாகவும் பயிற்சிகள் ஊடாகவும் பெற்றுக் கொடுக்கின்ற மிகச் சக்தி வாய்;ந்த அமைப்பாக இருக்கின்றது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற பல சம்பவங்கள் எங்களுடைய சமூகம் ஆரோக்கியமான நிலையில் இல்லை என்பதனைச் சொல்லிக் காடடிக்கொண்டிருக்கிறது.  அதாவது குடும்பத்துக்குள் ஏற்படுகின்ற சிறிய சம்பவங்களையோ, தோல்விகளையோ ஏமாற்றங்களையோ சமாளித்துக்கொள்கின்ற ஏற்றுக்கொள்கின்ற மனோபக்குவத்தினை பெற்றுக்கொள்ளாத நிலையில் பல்வேறு விபரீதமான முடிவுகளும் வன்முறைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இப்படியான மனநிலை வயது வித்தியாசமின்றி உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதனைவிடவும் மக்களுடைய மனங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை, அவர்களுடைய ஆற்றல்களை வழிப்படுத்த வேண்டிய தேவை, விசேடமாக இளைஞர், பெண்கள், மாணவர் சமூகத்திலே சிறந்த மாற்றம் ஒன்றைச் முழுமூச்சோடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் சாரணிய இயக்கம் என்பது அதிலே பெறுமதிவாய்ந்த விடயமாக இருக்கிறது.

சட்டம் ஒழுங்கு என்பது யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலங்களில் மிகவும் இயக்கமற்று இருந்து. எனவே சமூகமாகத்தான் தன்னைத்திருத்திக் கொள்ள வேண்டும் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு சாரணர் போன்ற இயக்கங்கள் உண்மையாக உழைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இளைஞர் யுவதிகள் தங்கள் கண்முன்னே காண்கின்ற மாயைகள் எல்லாம் உண்மை என்று நம்பி ஏமாறுகின்ற நிலை காணப்படுகிறது இந்த மன நிலையை மாற்றியாகவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டதுடன், 2017ஆம் ஆண்டு புனித மிக்கேல் கல்லூரியின் சாரணர் சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவையொட்டிய நிகழ்வு குறித்துக் கலந்துரையாடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .