2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

சில நாள்களுக்கு முன்னர் டிப்பர் விபத்தில் சிக்கி காயமடைந்து உயிர் தப்பிய நபரொருவர், நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான சோகச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பகுதியில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி - மீராவோடை பகுதியில் வசித்து வந்த  குறித்த நபர், நாவலடிக்கு சைக்கிளில் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது, பிரதான வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளானவரை, சிகிச்சைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்தவரின் உடல், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் மையைவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .