2021 மே 13, வியாழக்கிழமை

’முரண்பாடுகளைத் தீர்க்கும் தேசிய இன நல்லிணக்கத்துக்கான கற்கைநெறி’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 06 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் உட்பட நாட்டிலுள்ள 7 உயர் கல்வி நிலையங்களில் 'முரண்பாடுகளைத் தீர்க்கும் தேசிய இன நல்லிணக்கத்துக்கான கற்கைநெறி'  ஆரம்பிக்கப்படவுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

2018ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகங்களில் இப்புதிய கற்கைநெறியைச்  சேர்த்துக் கொள்வதற்கான உடன்படிக்கை  கைச்சாத்திடப்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறினர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால், 'முரண்பாடுகளைத் தீர்த்தல் மற்றும் நல்லிணக்கம்' என்ற பெயரில் இந்தக் கற்கைநெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், றுகுணு, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை பௌத்த கல்லூரி மற்றும் ஜாமியா நழீமியா கலாபீடம் ஆகியவற்றிலும் இக்கற்கைநெறி ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்தக் கற்கைநெறியை நடைமுறைப்படுத்துவதற்காக பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது  எனவும் அவர்கள்  தெரிவித்தனர்.

நாட்டில் எதிர்காலத்தில் இன முரண்பாடுகள் விரிசல் அடையாமல் இருப்பதற்கும் அழிவுபூர்வமான முரண்பாட்டுச் சிந்தனைக்குப் பதிலாக ஆக்கபூர்வமான அபிவிருத்திச் சிந்தனையை  ஏற்படுவதற்கும்  எதிர்கால இளைஞர் சமூகம் கட்டி எழுப்பப்படுவதை நோக்காகக் கொண்டே இந்தக்  கற்கைநெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என  மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் ; கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர் தெரிவித்தார்..

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .