Niroshini / 2015 நவம்பர் 16 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அபிவிருத்தித் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சத்துருக்கொண்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில் மீன்பிடித்துறையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதமஅதிதியாக கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கே.துரைராசசிங்கம் கலந்துகொண்டதுடன், விவசாய அமைச்சின் செயலாளர் ரி.சிவநாதன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ்.தங்கவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீன்பிடித் துறையினை வளப்படுத்தும் முகமாகவும் நன்நீர் மீன்பிடியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் மேற்படி மீன்பிடி வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்டத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட மதுரங்கேணி மீனவர் கூட்டுறவுச் சங்கம், முறக்கொட்டான்சேனை மீனவர் கூட்டுறவுச் சங்கம், மயிலவட்டவான் மீனவர் கூட்டுறவுச் சங்கம், புதூர் அன்னைவாவி மீனவர் கூட்டுறவுச் சங்கம், வெலிக்காகண்டி செந்தாமரை மீனவர் கூட்டுறவுச் சங்கம், புதுக்குடியிருப்பு மீனவர் கூட்டுறவுச் சங்கம், வாகனேரி நன்நீர் மீனவர் கூட்டுறவுச் சங்கம், வடமுனை மீனவர் கூட்டுறவுச் சங்கம், வவுணதீவு சின்னப்புக் குளம் மீனவர் கூட்டுறவுச் சங்கம் போன்ற அமைப்புகளுக்கே இம் மீன்பிடி வலைகள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, மீனவ சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரினால் கேட்டறியப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Nov 2025
16 Nov 2025
16 Nov 2025