2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

சித்தாண்டி - 01 வில்லுத்தோட்ட மக்கள் சிரமதானப் பணியில்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சித்தாண்டி – 01 வில்லுத்தோட்ட மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் சிரமதானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சா.மகேந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதான நிகழ்வில், கிராமசேவை உத்தியோகத்தர் ம.பீதாம்ரம் மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டு. மாவட்டத் தலைவர் த.வசந்தராசா ஆகியோருடன், அக்கிராம மக்களும் கலந்துகொண்டனர்.  


வில்லுத்தோட்டம் எனும் பகுதிக்கும் சித்தாண்டி – 01 பகுதிக்குமான வீதியில் வாய்க்காலுள்ளது. இதற்கு பல அரசியல்வாதிகளும்; அதிகாரிகளும்  பாலம் போட்டுத் தருவதாக வாக்குறுதியளித்தபோதிலும், எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் தாமாகவே முன்வந்து வாய்க்காலை நிரப்புவதாக சித்தாண்டி – 01 வில்லுத்தோட்டம் மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .