2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

செங்கலடி பிரிவில் 14 ஆயிரம் ஏக்கர் காணி மேய்சல் தரைக்கென ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார், ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பண்ணை வளர்ப்பாளர்களின் நலன்கருதி மேலும் 14 ஆயிரம் ஏக்கர் காணி மேய்சல் தரைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை செங்கலடி பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற பெரும்போக செய்கை தொடர்பான கலந்துரையாடலிலேயே இந்த நில ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மேய்ச்சல் நிலங்களுக்கென வெல்லாவெளி பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதியில் 800 ஏக்கரும், பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதியில் 200 ஏக்கரும், வவுனதீவு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதியில் 14000 ஏக்கரும், செங்கலடி பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதியில் 14000 ஏக்கரும் மேய்ச்சல் நிலங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்து.

இந்நிலையில், இவற்றில் செங்கலடி பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதியின் பெரும்பாலான பகுதியை வெளியார் ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் வெளிமாவட்டங்களில் இருந்து கால்நடைகளை கொண்டுவந்தும் இப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். இதன் காரணமாக தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது தொடர்பில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

கல்முனை, நற்பட்டிமுனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, வெல்லாவெளி, பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுகளில் இருந்தே தமது பிரிவுக்கு அதிகமான கால்நடைகள் மேய்ச்சலுக்கென கொண்டு வரப்படுவதாகவும் பண்னையாளர்கள் குற்றஞ்சாட்டியதுடன், அவர்கள் இப்பகுதிக்கு வருவதை தடைசெய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், அவர்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு கால்நடைகளை கொண்டுவருவதை தடைசெய்ய முடியாது என தெரிவித்த அரசாங்க அதிபர், பண்ணையாளரின் நன்மை கருதி மேய்ச்சல் நிலங்களின் விஸ்திரத்தை அதிகரிக்கலாம். அதற்காக 14 ஆயிரம் ஏக்கர் காணியை மேலதிகமாக மேய்ச்சல் தரைக்கென ஒதுக்குவதாக தெரிவித்தார்.

இதனை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் முன்மொழிந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.செல்வராசா வழிமொழிந்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .