2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

15 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

15 வருடங்களுக்குப் பின்னர் மக்கள் போக்குவரத்திற்கு வவுணதீவு வலையிறவு உள்வீதி நேற்று திங்கட்கிழமை முதல் திறந்து விடப்பட்டுள்ளது.

வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாம் சந்தி முதல் சின்னப் பாலம் வரையிலான வீதி பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக படைத் தரப்பினால் மக்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், பாதுகாப்புப் படையினர் மாத்திரமே இவ் வீதியைப் பயன்படுத்தி வந்தனர்.

1995 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பொதுமக்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த இவ்வீதி 15 வருடங்களின் பின்னர், போக்குவரத்து நலன் கருதி இவ் வீதியை திறந்துவிட நடவடிக்கையெடுத்ததாக வவுணதீவு பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஜ.உவைஸ் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .