2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

சட்ட விரோதமாக மின்சாரம் பாவித்ததாக 164 பேருக்கு சுமார் 28 இலட்சம் அபராதம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லத்தீப்)

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, கரடியனாறு, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 16 பேர் சட்டவிரோதமாக மின்சாரம் பாவித்ததாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ.ராமக்கமலன் நேற்று சுமார் 28 இலட்சம் அபராதம் விதித்தார்.

இலங்கை மின்சாரசபையின் விசேட புலனாய்வு குழுவொன்று பொலிஸாரின் உதவியுடன் நடத்திய திடீர்சோதனையை அடுத்து சட்ட விரோதமாக மின்சாரம் பாவித்ததாக 164 பேருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இவ்விதம் ஆஜர் செய்யப்பட்டவர்களுக்கு 15,500 ரூபா முதல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் சட்டவிரோதமாக மின்சாரம் பாவித்த மூவர் இன்று நீதிமன்றத்தில் சமூகமளிக்காததால் அம் மூவரையும் கைது செய்யுமாறு நீதிபதி ராமக்கமலன் பிடிவிறாந்து பிறப்பித்தார்.

இதேவேளை இன்று அபராதம் விதிக்கபட்டு அபராதத்தொகை செலுத்த தவறிய 14 பெண்களை விளக்கமறியலில் வைக்க சிறைச்சாலை அதிகாரிகள் இன்று மாலை மட்டகக்களப்பு  சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .