2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

20 வருடங்களாக திறக்கப்படாதுள்ள சந்தைக்கட்டிடம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

கிழக்கு மாகாணத்தில் சகல அலுவல்களும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலை காணப்படுகின்ற போதிலும் 1990 ஆண்டுக்கு முன்னர் ஏறாவூர் நகர பிரதேச சபையினால் நிருமாணிக்கப்பட்ட சந்தைக் கட்டடத் தொகுதி தொடர்ந்தும் திறக்கப்படாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

1990 ஆண்டு குறித்த பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் அக்காலப்பகுதியில் சுமூகமற்ற நிலை காரணமாக இதனைத் திறப்பதில் சில நடைமுறைச் சிக்ல்கள் காணப்பட்டன.

தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகின்ற போதிலும் இதனைத் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரதேசசபை நிருவாகம் மௌனம் சாதிப்பதாக அப்பிரதேச மக்கள் பாரளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவின் கவனத்தில் கொண்டு வந்துள்ளனர். ஏறாவூர் நகர தமிழ் - முஸ்லிம் எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுச்சந்தை மூடப்பட்டுள்ள நிலையிலுள்ளதைப் படங்களில் காணலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .