Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எஸ். வதனகுமார்)
மட்டக்களப்பில் இன்று காலை பாடசாலை மாணவி ஒருவர் பலியான விபத்துக்கு காரணமான ட்ரக் வாகனம், சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்ததாகவும் அவ்வாகனத்திற்கு இவ்வருடத்திற்கான அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு புதுப்பாலச்சந்தியில் இன்று காலை சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 16 வயது மாணவியான பற்குணம் கோகிலா, ட்ரக் வாகனமொன்றால் மோதப்பட்டதால் ஸ்தலத்திலேயே பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாகனத்தின் சாரதியையும் உரிமையாளரையும் பொலிஸார் கைதுசெய்து விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேற்படி வாகனம் சம்பவ இடத்திலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பூமாச்சோலை எனும் இடத்திலிருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் விபத்தின்போது வாகனத்தின் உரிமையாளரே அதை செலுத்தி வந்ததாகவும் அவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி உபுல் நிருபசிங்க தமிழ் மிரர் இணையத் தளத்துக்குத் தெரிவித்தார்.
இந்நிலையில், அவ்வாகனம் மணல் ஏற்றிய இடத்திலிருந்து விபத்து நடைபெற்ற இடம்வரையான வீதிகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் இது குறித்து விசாரணை நடத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago