Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன் )
மட்டக்களப்பு- வாழைச்சேனை வீதியிலுள்ள முறக்கொட்டாஞ்சேனையில் இன்று பிற்பகல் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் முச்சக்கர வாகன சாரதியொருவர் அந்த இடத்திலேயே பலியானார்.
குறித்த முச்சக்கர வாகனம் மின் கம்பத்துடன் மோதியதால் ஏற்பட்ட இந்த விபத்தின் போது, ஆட்டோவில் பயணம் செய்த 3 பெண்கள் காயங்களுடன் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆட்டோ சாரதி மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் உப முகவர் என்றும், மட்டக்களப்பு நகரிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திற்கு அலுவல்களின் நிமித்தம் குறிப்பிட்ட பெண்களை அழைத்து வந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
( ஆர்.அனுருத்தன் )
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .