2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

வாகரையில் ஆயுதங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திலுள்ள புச்சாக்கேனியில் ஏற்கனவே விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி ஆயுதங்களும் வெடிபொருட்களும் நேற்று இராணுவத்தினரால் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
 
இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் பேரில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவை கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
20 கிலோ எடையுடைய அமுக்கவெடி - 01,
கைக்குண்டு - 01,
ரி 56 ரக துப்பாக்கி ரவைகள் - 751
அதற்கான மகசீன்கள் - 02, வோக்கி டோக்கி - 01, அதி சக்தி வாய்ந்த ரி.என்.ரி வெடிப் பொருள் - 2 கிலோ மற்றும் எம் - 16 ரக துப்பாக்கி ரவைகள் - 160
ஆகியனவே இவ்வாறு கண்டெடுக்கப்டப்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .