2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

வீரவில சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய கைதி மட்டக்களப்பில் கைது

Super User   / 2010 செப்டெம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிஹாரா லத்தீப்

ஹம்பாந்தோட்டை வீரவில சிறைச்சாலையில் கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த வேளை தப்பியோடி போது தப்பியோடி வந்த மட்டக்களப்பு வேலூர் கொலனியைச் சேர்ந்த சிறைக் கைதியை மட்டக்களப்பு பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

32 வயதான பரமானந்தம் யோகேஸ்வரன் என்பவருக்கு 48 மாத கால கடூழிய சிறைத் தண்டனையை கடந்த 2009.06.08 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் வழங்கியது.

குறித்த சிறைக் கைதி வீரவில சிறைச்சாலையிலிருந்து கடந்த 20 ஆம் திகதி தப்பியொடியிருந்தார். இவருடன் மட்டக்களப்பு நாவற்குடாவைச் சேர்ந்த கோகுலராஜ், மன்னாரைச் சேர்ந்த பழனி சந்திர குமார் ஆகியோர் தப்பியோடியதாக பாதுகாப்பு தகவலை மேற்கோள்காட்டி அரச தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிரிவு தகவல் வெளியிட்டிருந்தது.

நேற்றுக் காலை மட்டக்களப்பு நகரில் உள்ள அரசடி பஸ் தரிப்பிடத்தில் நின்ற சிறைக் கைதி யோகேஸ்வரனை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த கைதியை மீண்டும் வீரவில சிறைச்சாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .