2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு சோதனைக்கு மறுத்த வீட்டுரிமையாளர் நீதிமன்றில் மன்னிப்புக் கோரினார்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)

டெங்கு தொடர்பாக வீடொன்றை பரிசோதனை செய்ய பொதுச்சுகாதார பரிசோதகருக்கு அனுமதியளிக்க மறுத்த வீட்டுரிமையாளர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பொதுச்சுகாதார பரிசோதகரிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.

காத்தான்குடி ஊர் வீதியில் டெங்கு தொடர்பான சோதனையை மேற்கொண்டிருந்த காத்தான்குடி பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவொன்று, அப்பகுதியிலுள்ள வீடொன்றுக்கு சென்று டெங்கு பரிசோதனையை மேற்கொள்ள முற்பட்டபோது அவ்வீட்டு
உரிமையாளர் சோதனை செய்ய மறுத்ததுடன் பொதுச்சுகாதார பரிசோதகரையும் அவமானப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்ப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் குறித்த வீட்டு உரிமையாளருக்கெதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்
வழக்கொன்றை தொடுத்தனர்.

இதை விசாரித்த நீதவான் வி.ராமகமலன்  நேற்று  அவ்வீட்டுரிமையாளரை பொதுச்சுகாதார பரிசோதகரிடம்  பகிரங்கமாக மன்னிப்புக் கோருமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து, வீட்டுரிமையாளர் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் மன்னிப்புக் கோரினார்.

டெங்கு வேலைத்திட்டத்தின்போது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென இதன்போது தெரிவித்த நீதவான்,
அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது எனவும் வீட்டுரிமையாளருக்கு எச்சரித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .