Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜௌபர்கான், எல்.தேவ்)
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை பெற்றுகொடுக்க விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ஜெயராஜ் தலைமையிலான குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை மட்டக்களப்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நீண்டகாலமாக தொடர்ந்துவரும் கிழக்கு மாகாண பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் ஏற்கனவே கல்வி அமைச்சர் பந்துல குணர்வத்தனவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளேன். மிக விரைவில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிய பிரதிநிதிகளை கல்வி அமைச்சரை சந்திக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளேன்.
இவர்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர்களுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதி சந்தித்து தமது கோரிக்கையினை முன்வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .