2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஓய்வு பெற்ற செங்கலடி பிரதேச கல்விப் பணிப்பாளர் விபத்தில் பலி

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன் )
 
மட்டக்களப்பு வாழைச்சேனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஓய்வு பெற்ற செங்கலடி பிரதேச கல்விப் பணிப்பாளர் கதிர்காமத்தம்பி விஜயரட்னம்(65) நேற்றிரவு உயிரிழந்தார்.
 
கடந்த சனிக்கிழமை குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில்  பயணம் செய்து கொண்டிருந்த போது அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும்ம் உழவு இயந்திரமொன்றும் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது.
 
இவ்விபத்தில் காயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற போதிலும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று நள்ளிரவு மரணமானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .