2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

தாழங்குடாவிலுள்ள தேசிய கல்விக் கல்லூரியில் கற்பித்தல் தேசிய டிப்ளோமா பாடநெறிக்கு நேர்முகப் பரீட்சை

Super User   / 2010 நவம்பர் 11 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கற்பித்தல் தேசிய டிப்ளோமா (2010) பாடநெறிக்கு ஆசிரிய பயிலுனர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பான நேர்முகப்பரீட்சை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள விண்ணப்பதாரிகளுக்கு  மட்டக்களப்பு தாழங்குடாவிலுள்ள தேசிய கல்விக் கல்லூரியில் எதிர்வரும் 15ஆம், 16ஆம், 18ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து கணிதம், விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், சித்திரம், தொழிநுட்பக்கல்வி ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளுக்கே இந்நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதற்காக விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பீடாதிபதி பாக்கியராசா மேலும் தெரிவித்தார்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .