2021 ஜூலை 31, சனிக்கிழமை

இலக்கியமும் தேசியமும் இணைகையில் கலாசாரத்தை காப்பாற்றலாம்: அரியநேத்திரன் எம்.பி.

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

தமிழ் இலக்கியமும் தமிழ்த் தேசியமும் ஒன்றாக இணையும்போதே எமது கலாசாரப் பண்பாடுகளை நாம் காப்பாற்ற முடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பட்டிப்பளை பிரதேச கலை, இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தால் நடத்தப்பட்ட 'மண்கமழும் மங்கல விழா' என்னும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  

எமது பிரதேசத்தின் பண்டைய கலைகள், இலக்கியங்கள் என்பன அழிவடைந்து கொண்டு வருகின்றன. தற்போதைய காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் எமது பண்டைய கலை, இலக்கியங்களை வளர்ச்சியடையச் செய்ய முடியும்.
ஒரு இனத்தின் தொன்மையும் அவ்வினத்தின் சிறப்பியல்புகளையும் பற்றி அறிந்துகொள்ள  வேண்டுமானால், அந்த இனம் சார்ந்த கலை, கலாசாரங்களை பற்றி ஆராய வேண்டும்.

எமது இந்த பண்டைய கலை, கலாசாரங்கள் அழிவடையுமாக இருந்தால் இங்கு நாம் வாழ்ந்ததற்கான சான்றுகளே இல்லாமல் போகும். எனவே, இந்த கலை கலாசார விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வுக்கு பட்டிப்பளை பிரதேச கலை, இலக்கிய, சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் திரு.த.மேகராசா தலைமை தாங்கினார். சிறப்பு அதிதியாக மண்முனை தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் திரு.த.பேரின்பராசாவும் கௌரவ அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடாதிபதி பேராசிரியர் மா.செல்வராசாவும் கலந்துகொண்டனர்.  

அத்துடன் 'மெல்லப்பற' என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன்,  பண்டைய கலைஞர்கள், நாட்டு வைத்தியர்கள், கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. இதன்போது பண்டைய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .