2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

மட்டு. அமெரிக்கமிஷன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் விரிவுரையாளர்களும் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு திருப்பெருந்துறையிலுள்ள அமெரிக்கமிஷன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் விரிவுரையாளர்களும்  இன்று திங்கட்கிழமை காலை முதல் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

'குடும்ப நிர்வாகத்தைக் கொண்ட இத்தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாகத்தை மறுசீரமைக்க வேண்டும்',  'இக்கல்லூரியுடன் தொடர்புடையவர்களையும் துறைசார்ந்தவர்களையும் நிர்வாகத்தில் இணைத்து நிர்வாகத்தை மறுசீரமைக்க வேண்டும்', 'கல்லூரியின் உபஅதிபர் அதிபராக நியமனம் செய்யப்பட வேண்டும்', 'இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்ட இத்தொழில்நுட்பக் கல்லூரியில் கடமையாற்றும் விரிவுரையாளர்களுக்கான சம்பள உயர்வு, போனஸ் கொடுப்பனவு, மருத்துவச் செலவு என்பன வழங்கப்பட வேண்டும்', 'மூடப்பட்டுள்ள விடுதியை  திறக்க வேண்டும்;', நிறுத்திவைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான மதிய உணவை வழங்க வேண்டும்' போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரியின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோகங்களை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு மட்டக்களப்பு பொலிஸார் விரைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .