2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது

Super User   / 2011 மார்ச் 30 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித், ஆர்.அனுருத்தன்)

கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள பொலிஸாரை வெளியேற்ற வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பிற்காக கடமையிலுள்ள பொலிஸாரை வெளியேற்ற வேண்டும் என மாணவர்கள் விடுத்து கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு சார்ந்த பல ஒழுங்குகள் உள்ளதாக இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கால வரையரைறயின்றி பல்கலைக்கழகத்தின் 4 பீடங்களின் கல்வி நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதென முடிவெடுத்துள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .