2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

சின்னவத்தைக் கிராமத்தில் சுகாதாரத் திட்ட ஆரம்ப நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்  ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னவத்தைக் கிராமத்தில் சுகாதாரத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

சின்னவத்தை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற  சுகாதாரத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் திட்டத்திற்குரிய இணைப்பாளர் நிருமிதன், போரதீவுப்பற்று பிரிவின் தலைவர், சின்னவத்தைக் கிராமத்தின் கிராம மட்ட அமைப்புக்கள்,  சிங்கள மக்களும் கலந்து கொண்டனர்.

இக்கிராமத்தில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் பற்றியும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள  செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .